Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை கண்முன் 13,15 வயது மகள்கள் பலாத்காரம்: குஜராத்தில் நடந்த கொடூரம்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (22:57 IST)
இந்தியா முழுவதிலும் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தந்தையின் கண்முன்னே அவரது 13 மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


 


குஜராத்தில் தாஹோத் மாவட்டத்தில் பெட்டிக்கடை வைத்துள்ள ஒருவர் மீது முன்விரோதம் கொண்ட ஒரு கும்பல் அவரை பழிக்கு பழிவாங்க அவரது இரண்டு மகள்களையும் 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தி சென்றனர். அதே காரில்   இளம்பெண்களின் தந்தையையும் கடத்தினார்கள்.

பின்னர் ஓடும் காரிலேயே இரண்டு மகள்களையும் தந்தை கண்முனே காரில் இருந்தவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் குமாத் பாரியா என்பவர் உள்பட 5 பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்