Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் மீது 2-3% வரி: மத்திய அரசு புதிய திட்டம்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (15:46 IST)
இந்திய நாட்டின் மறைமுக விதிப்பை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சியாக மத்திய அரசு ஜிஎஸ்டி விரி விதிப்பை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 

 
ஜிஎஸ்டி மசோதாவில் தொடர்ந்து பல மாற்றங்கள், மேம்படுத்தும் பணிகளைச் செய்து வரும் மத்திய அரசு தற்போது பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் சில முக்கிய உற்பத்தி பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
 
தற்போது ஜிஎஸ்டி மசோதாவில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இடையில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு விடை காணும் விதமாக மத்திய அரசு, பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் சில முக்கியப் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 
 
இதன் மூலம் ஜிஎஸ்டி மசோதாவில் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அதிகளவில் குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
 
ஜிஎஸ்டி விதிப்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை இணைப்பதன் மூலம் மத்திய அரசு 2-3 சதவீத வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் பெறும்.
 
இந்தியாவில் மாநில அரசுகள் தங்களது திடீர் நிதி தேவையைத் தீர்க்கும் ஒரு கருவியாகவே பெட்ரோல், டீசல் பொருட்கள் உள்ள நிலையில் ஜிஎஸ்டி மசோதாவிற்குள் இதனைக் கொண்டு வர மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments