Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றப்பட்ட 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய்

பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றப்பட்ட 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய்
, செவ்வாய், 31 மே 2016 (14:00 IST)
இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றப்பட்ட 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 
அசாம் மாநிலத்தில் தீக்காயத்துக்காக கவிகாத்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 3 வயது சிறுவனுக்கு சிகிச்சையின் போது இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவனுக்கு எயிட்ஸ் நோய் அறிகுறி தென்பட்டதால், சோதனை செய்த மருத்துவர்கள் எச்.ஐ.வி இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் எயிட்ஸ் நோய் தாக்கப்பட்டதற்கு சரியான முறையில் பரிசோதிக்கப்படாத இரத்தம் ஏற்றியது தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விபத்து நோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள் போன்றவர்களுக்கு, இரத்த வங்கியில் இருப்பில் இருக்கும் இரத்தம் ஏற்றப்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் இரத்த வங்கிகளின் அசாதாரன செயல்கள் மூலம் கடந்த 17 மாதங்களில் 2,234 பேருக்கு எயிட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 361 பேரும், குஜராத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இரத்த தானம் செய்பவர்களுக்கு எயிட்ஸ் நோய் ஆரம்ப கட்டமாக இருந்தால் அதாவது அதை விண்டோ பிரியர்ட் என்பார்கள், அந்த நிலைமையில் பரிசோதனை செய்தால் கூட தெரியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாராயணசாமியை கடுப்பேற்றிய செய்தியாளர்: கோபமாக பதில் அளித்து வாயை அடைத்தார்