Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல்: ஆ.ராசாவின் செயலாளருக்கு ஜாமீன்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (18:19 IST)
முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசாவின் செயலாளர் ஆர்.கே சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கனிமொழி எம்.பி., சரத்குமார், கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, கவுதம் ஜோஷி, அரிநாயர், சுரேந்திர பிபாரா, சாகித் பல்வா ஆகிய 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் ஆ.ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகிய இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் சித்தார்த் பெகுராவுக்கு பதவியை தவறாக பயன்படுத்தியதாக ஜமீன் மறுக்கப்பட்டது. சந்தோலியாவின் ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது.

சந்தோலியாவின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதாடும்போது சந்தோலியா எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் அப்போதைய அமைச்சரின் அறிவுறுத்தல்களின் பேரில் தான் செயல்பட்டார் என தெளிவுபடுத்தினார். இதனை தொடர்ந்து சந்தோலியா மீதான ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வாதங்களை ஏற்றுக்கொண்ட டெல்லி நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments