Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1998 அணு ஆயுத சோதனை வெற்றியே: கலாம்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (20:41 IST)
1998 ஆம் ஆண்டு இந்தியா ஒரே நேரத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை வெற்றிகரமானது என்று அப்போது அந்த திட்டத்தின் தலைவராக இருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

இந்தியா நடத்திய அந்த அணு ஆயுதச் சோதனை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு விஞ்ஞானி கே. சந்தானம் கூறியிருந்தார். இது குறித்து பெங்களூருவில் கலாமிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு முதலில் பதிலளிக்க மறுத்த முனைவர் கலாம், பிறகு, “அதனை விஞ்ஞானிகள் அறிவார்கள், அது ஒரு வெற்றிகரமான சோதன ை” என்று கூறியுள்ளார்.

இந்தியா சோதித்த தெர்மோ நியூக்கிளியர் டிவைஸ் என்றழைக்கப்படும் அந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டபோது வெளிப்பட்ட சக்தி எதிர்பார்த்த அளவிற்கு இருந்தது என்று இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான ஆர். சிதம்பரமும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments