Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 பேர் மரணம், பலர் கவலைக்கிடம்: வேதனையளிக்கும் கோழிக்கோடு விமான விபத்து!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.
 
விமானத்தில் பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக மலப்புரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments