ஏடிஎம் மூலம் 157 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் விநியோகம்: ரிசர்வ் வங்கி பகீர் தகவல்!
ஏடிஎம் மூலம் 157 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் விநியோகம்: ரிசர்வ் வங்கி பகீர் தகவல்!
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வங்கி ஏடிஎம்கள் மூலம் 157 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வங்கிகள் மூலம் கண்டறியப்படும் கள்ள நோட்டுகள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஏடிஎம்கள் மற்றும் வங்கிகள் மூலம் 19 லட்சம் கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54.21 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.42 லட்சம் 100 ரூபாய் நோட்டுக்கள். 42.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8.56 லட்சம் 500 ரூபாய் நோட்டுக்கள். 47 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.7 லட்சம் 1000 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
எனவே வங்கிகளில் கள்ள நோட்டுக்களை கண்டறியும் இயந்திரங்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வங்கிகளுக்கு கூறப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கு முன்னர் இயந்திரங்கள் மூலம் நோட்டுக்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் நிரப்பப்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.