Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் குழந்தை பெற்ற 15 வயது சிறுமி

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (15:03 IST)
டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு தேர்வின் போது பள்ளியில் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பள்ளி சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பள்ளியில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் உள்ள முகர்ஜி நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 51 வயது ஆட்டோ ஓட்டுநர் கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை சிறுமி வெளியே சொல்லாமல் இருக்க அவர் அவ்வப்போது சிறுமிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் சிறுமி எதிர்பாராதவிதமாக கர்பம் ஆகியுள்ளார். இதனை சிறுமி வீட்டில் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளியில் தேர்வின்போது வயிற்று வலியால் துடித்துள்ளார். அப்போது கழிவறைக்குச் சென்ற அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி ஊழியர்கள் உடனே போலீஸில் புகார் அளித்தனர்.
 
விசாரணையில் சிறுமி குழந்தை பெற்றதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்