Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு மாணவி!

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 5-ஆம் வகுப்பு மாணவி!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (10:12 IST)
கர்நாடகா மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
எம்.எம்.ஹில் மொராஜி தேசாய் பழங்குடியினர் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது பெண் தனது பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஆசிரியரோ, மாணவிகளோ யாரும் அங்கு இல்லாத சூழலில் குழந்தை பெற்றெடுத்து தானே தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார் அந்த மாணவி.
 
குழந்தை சத்தம் கேட்கிறதே என பள்ளியின் சமையல் ஊழியர் போய் பார்த்த பின்னர் தான் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
தனது குழந்தைக்கு 20 வயதான சிவ் தான் தந்தை என மாணவி கூறியுள்ளார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கர்ப்பமாக இருந்ததை யாரிடமாவது கூறினால் அடித்து விடுவேன் என மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என்றார்.
 
மாணவி கர்ப்பமாக இருக்கும் அறிகுறி பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியின் காதலர் சிவ்-ஐ தற்போது காவல்துறையினர் பிடித்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: பொள்ளாச்சி வழக்கு குறித்து விஜய்..!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க முடியவில்லை.. மாணவர்கள் குழப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments