Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிடப்பட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (12:14 IST)
பஞ்சாப் மாநிலத்தில், ஓடும் பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை எதிர்த்துப் போராடிய 14 வயது சிறுமி பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்தார். 
 
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி  35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 14 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தார். 

அந்தப் பேருந்து, டோல் பிளாசா என்ற இடம் தாண்டி மோகா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் இருந்த 2 நடத்துநர்களில் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
 
அப்போது, அந்தப் பேருந்தில் மிகக் குறைவான பயணிகளே இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் இதை ஓட்டுநர் கண்டுகொள்ள வில்லை.
 
நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்ததால், பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாயும்  மகளும் வெளியே தள்ளப்பட்டதாகவுவும் கூறப்படுகிறது.  
 
தாய்-மகள் இருவரையும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தாய்-மகள்  இருவரும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மகள் உயிரிழந்தார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து பஞ்சாப் முதலமைச்சர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் மற்றொரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுக்கபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநர்களும் தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!