Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13,000 பேர் கற்பழிப்பு, 19,902 கடத்தல் வழக்கு - அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (14:28 IST)
FILE
அசாமில் மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 13,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரை 12,857 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 59 பெண்கள் கற்பழிக்கபட்டப்பின் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8,181 கற்பழிப்பு வழக்குகளில் 76 சதவீதம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு 12, 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதே போல, கடந்த ஆண்டுகளில் சுமார் 19,902 பெண் கடத்தல் வழக்குகள் பதிவாகியிருந்தன.அதில் 14,488 வழக்குகளில் பெண்கள் திருமணம் சார்ந்த விஷயங்களுக்காக கடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய குற்றங்களுக்கு சமூக மற்றும் குடும்ப பளு, பாலின பாகுபாடு, வறுமை, வேலை வாய்ப்பு இல்லாமை போன்றவை தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!