Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் கண் எதிரே 12 வயது சிறுமியை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த கும்பல்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:18 IST)
பெற்றோர்கள் கண் எதிரே 12 வயது சிறுமி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இரவு 10 பேர் கொண்ட கும்பல் புறநகர் பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் சிறுமியின் பெற்றோர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் சிறுமியின் தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், தடுக்கச் சென்ற சிறுமியின் சகோதரனையும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர், பெற்றோர்களை வீட்டிற்குள் அடைத்துவிட்டு சிறுமியை அந்த கும்பல் சிறிது தூரம் தரதரவென்று இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
 
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்