Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 12 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2015 (01:30 IST)
கனமழை காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
மதுரையில் இருந்து நள்ளிரவு புறப்பட வேண்டிய நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி ரயில் ரத்து செய்யப்படுகிறது.
 
சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் மற்றும்  சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் - கரக்பூர் வாரம் இருமுறை ரயில் மற்றும் ஆழப்புலா - தன்பாத் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மற்றும்  விஜயவாடா - சென்னை, சென்னை - விஜயவாடா பினாகினி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கூடூர் - சென்னை, சென்னை டூ கூடூர் மற்றும் கூடூர் டூ சென்னை பயணிகள் ரயில்கள் மற்றும்  சென்னை எழும்பூரில் இருந்து கயா புறப்பட வேண்டிய வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுகிறது.
 
மேலும், சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரயிலும் ரத்து செய்யப்பட்டுளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments