Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 சிறப்பு ரயில்கள் ரத்து: முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்!

Webdunia
சனி, 8 மே 2021 (10:02 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் 6 மாதம் வரை கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
 
தமிழகத்தில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 12 சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு
 
 
சென்னையில் இருந்து கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, நாகர்கோவில் பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையும் ரத்து
 
அரக்கோணம் - ஜோலார்பேட்டை, மேட்டுபாளையம் - கோயம்புத்தூர், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உட்பட 9 இணை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் ரத்து 
 
நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் (02433/02434) ராஜ்தானி சிறப்பு ரயில்கள் வரும் 12-ம் தேதி முதலும், பிட்ராகுண்டா - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (07237/07238) இன்று முதல் 31-ம் தேதி வரையிலும் ரத்து
 
அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் (09220/09219) சிறப்பு ரயில்கள் வரும் 10-ம்தேதி முதலும், காந்திதாம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (09424/09423) வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - போர்பந்தர் (09262/09261) சிறப்பு ரயில்கள் வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - இந்தூர் (09332/09331) சிறப்பு ரயில்கள் வரும் 11-ம் தேதி முதலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments