Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிசிடிவி கேமிரா மூலம் சிக்கிய குற்றவாளி!

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிசிடிவி கேமிரா மூலம் சிக்கிய குற்றவாளி!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:58 IST)
போபாலில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காமிரா மூலம் கண்டுபிடிடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் தனது சிறிய சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தார் ஒரு 10 வயது சிறுமி. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை கொஞ்சுவது போல முதலில் சிறுமியை அனுகியுள்ளான்.
 
பின்னர் தனது எல்லையை மீறி அந்த சிறுமியை சீண்ட ஆரம்பித்துள்ளான். இதனால் அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். இதனை அந்த பகுதி வழியாக சென்ற ஒரு நபர் கண்டும் காணாமல் போனது அதிர்ச்சியை அளிக்கிறது.
 
இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்துக் கொண்டு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், அங்குள்ள கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர் என்பது தெரியவந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்