Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டு முழுவதும் தினமும் பலாத்காரம்: 10 வயது சிறுமியை சீரழித்த மாமா!

ஆண்டு முழுவதும் தினமும் பலாத்காரம்: 10 வயது சிறுமியை சீரழித்த மாமா!

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (10:47 IST)
மேற்கு வங்கத்தில் 10 வயது சிறுமி ஒருவர் டெல்லியை சேர்ந்த தனது மாமாவால் கடந்த ஓராண்டாக தினமும் பலாத்காரம் செய்யப்பட்டுவந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஜமியா என்னும் நகரை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு 10 வயது சிறுமி ஒருவர் இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு இவர் மாமா முறை.
 
ஆனால் தான் மாமா முறை என்றும் பாராமல் அந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் இவர். சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பின்னர் இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தனது வெறியை தீர்த்துள்ளார்.
 
தான் இப்படி நடந்துகொள்வதை வெளியே சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி கடந்த ஓராண்டாக தினமும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான் இந்த கொடூரன். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த நபர் ஊருக்கு சென்றுள்ளார்.
 
இதுதான் சரியான நேரம் என கருதிய அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்து வரும் இந்த கொடூர சம்பவத்தை பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறப்பு படை ஒன்றை அமைத்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்