Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் முதல்வர்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (19:21 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று மட்டும் கேரளாவில் 1,038 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி கேரள மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கேரளாவில் 1,038  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கேரள கேரள முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.  குறிப்பாக அதிகபட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 226 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். மேலும் கேரளாவில் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,818 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகம் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்றாலும் இன்றைய அதிகபட்ச பாதிப்பு காரணமாக முதல்வர் பினராயி விஜயன் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments