Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 989 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

Webdunia
வெள்ளி, 16 மே 2014 (07:58 IST)
16 வது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் 989 மையங்களில் நடைபெறுகின்றன.காலை 9.30 மணிக்கு முதல்கட்ட முடிவுகளின் நிலவரம் வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக முடிவுகள் வெளிவரத் தொடங்கும். 
 
மாலை 5 மணிக்குள் பெரும்பாலும் அனைத்து முடிவுகளும் வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, வாக்கு எண்ணிக்கை இரவு நேரத்திலும் நீடித்தால் அதற்கான வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
 
நாட்டின் 16 வது மக்களவைக்கு 9 கட்டங்களாக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
 
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அரைமணி நேரத்துக்குப் பின்னர் மின்னணு ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Election Results 2014 Tamilnadu Lok Sabha Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm

LIVE Lok Sabha 2014 Election Results
 
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Show comments