Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோடியின் மனைவி பெயர் ஜசோதாபென்!

நரேந்திர மோடியின் மனைவி பெயர் ஜசோதாபென்!
, வியாழன், 10 ஏப்ரல் 2014 (12:07 IST)
இதுவரை அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் எல்லாம் மனைவியின் விபரத்தை குறிப்பிடாமல் வெறிடமாகவே விட்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக மனைவியின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்யும் போது வேட்புமனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் தன் மனைவியின் விபரத்தை குறிப்பிடவில்லை. இந்நிலையில் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது திருமணம் தொடர்பான கட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கோரியிருந்தார்.
 
இதையடுத்து நேற்று வதோதராவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என குறிப்பிட்டுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil