Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேமமாலினிக்கு ஆதரவாக மகள் இஷா தியோல் பிரச்சாரம்

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (17:33 IST)
நாடாளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இவரது மகளும் இந்தி நடிகையுமான இஷா தியோல் நாளை கோவர்த்தன் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
Hemamalini & Esha deol
பிரச்சாரத்திற்காக இஷா தியோல் இன்று மதுரா வந்தடைந்தார். மதுராவில் வருகிற 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. சமாஜ்வாதி கட்சியின் சந்தன் சங், ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் யோகேஷ் திவேதி ஆகியோரை எதிர்த்து ஹேமமாலினி களமிறங்கியுள்ளார்.
 
இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் சந்தன் சிங் மற்றும் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் ஹேமமாலினியும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் யோகேஷ் திவேதியும் புகார் அளித்துள்ளனர்.
 
இதுகுறித்து பாஜக மாவட்ட செயலாளர் ரவீந்திர பாண்டே கூறுகையில், “பெரிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களை முதலில் இடம்பெறச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது. இதுகுறித்த புகார் முதன்மை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

Show comments