Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுவிக்கப்பட்டார் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன்!

Webdunia
வியாழன், 3 மே 2012 (16:06 IST)
FILE
இரண்டு வாரங்களுக்கு முன்னால் சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டக் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். அவர் சற்று முன் விடுவிக்கப்பட்டார்.

சட்டிஸ்கார் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தூதர்களிடம் அவர் சற்று முன் ஒப்படைக்கப்பட்டார்.

இன்னும் அரை மணிநேரத்தில் அவர் தன் வீட்டுக்கு திரும்பவுள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி அவர் கடத்தப்பட்டார்.

இந்த நிலையில் செவ்வாயன்று பி.பி.சி.க்கு அளித்த அறிக்கையில் கலெக்டரை இன்று விடுவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

கலெக்டர் விடுவிக்கப்பட்டதையடுத்து அலெக்ஸ் மேனன் குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் தூதர்கள் மாவோயிஸ்ட்கள் பகுதிக்கு சென்றனர். இவர்களுடன் சி.பி.ஐ. கட்சி எம்.எல்.ஏ. குஞ்சம் என்பவரும் சென்றார். டாட்மெல்டா என்ற மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிரம்பிய வனப்பகுதியில் கலெக்டர் அலெக்ஸ் விடுவிக்கப்பட்டார்.

அரசு வகுத்த உரையாடல் மாதிரியில் மாவோயிஸ்ட்கள் திருப்தி அடைந்துள்ளதாக சி.பி.ஐ. கட்சி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

குஞ்சம் என்பவர் அனைத்திந்திய ஆதிவாசி மகாசபையின் தலைவர். மாவோயிஸ்ட்கள் தங்கள் சார்பாக பேச பரிந்துரை செய்த 3 நபர்களில் இவரும் ஒருவர்.

அலெக்ஸ் பால் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டபோது அவருக்கு மருத்துவ உதவி செய்ததில் இந்த குஞ்சமின் பங்கு அபரிமிதமானது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அல்கேஸ் பால் மேனனின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மூலம் அல்கெஸ் பால் மேனன் ராய்ப்பூருக்கு அழைத்து வரப்படுகிறார். இந்தச் செய்தியால் அலெக்ஸ் பாலின் சொந்த ஊரானா சமாதானபுரத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அவர் சுக்மாவிலேயே கலெக்டராக பணியாற்றவேண்டும் என்று அவரது தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments