Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை- ஜார்கண்டில் பயங்கரம்

வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை- ஜார்கண்டில் பயங்கரம்
, வியாழன், 24 ஏப்ரல் 2014 (15:05 IST)
நோய்வாய்ப்பட்ட கணவனைக் காரணம் காட்டி பாக்கியுள்ள வரதட்சணைப் பணத்திற்கு மனைவியின் கிட்னியை கொடுக்குமாறு செய்ததால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் தேவி என்ற இந்தப் பெண்ணிற்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 
சுதாமா கிரி குடும்பம் பூனம் தேவி குடும்பத்திடமிருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணைப் பெற்று கொண்டனர்.
 
இருந்தாலும் போதவில்லையாம்! தொடர்ந்து பூனம் தேவியை வரதட்சணை கேட்டு துன்பம் செய்துள்ளனர்.
 
இந்த நிலையில் கணவன் சுதாமா கிரி நோய்வாய்ப்பட்டார். அவரது கிட்னி செயலிழந்தது.

இந்த நிலையில் பூனம் தேவி அவரது கிட்னியை கணவனுக்கு தானமாக அல்லாமல் வரதட்சணையாக கொடுக்கவேண்டும் என்று சுதாமா கிரி குடுபத்தினர் டார்ச்சர் செய்துள்ளனர்.
 
இந்தப் பெண்ணும் கிட்னியை தானம் கொடுத்து விட்டு இனி வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டார்.
 
ஆனால் உறுதிகள் காற்றில் பறக்க மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கு இணங்க பூனம் தேவியை தொடர்ந்து மேலும் மேலும் பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
 
கொடுமை தாங்காமல் பூனம் தேவி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார் பூனம் தேவி.
 
இதைத் தொடர்ன்கு அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய பூனம் தேவியின் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil