Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிபியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம் உடனடித் தொடக்கம்: அயலுறவு அமைச்சகம்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2011 (16:34 IST)
லிபியாவில் அந்நாட்டு அதிபர் கர்னல் கடாஃபியை ஆட்சியில் இருந்து வெளியேறுமாறுக் கோரி நடைபெற்றுவரும் புரட்சியை இராணுவத்தைக் கொண்டு கட ா ஃபி அரசு ஒடுக்கி வரும் நிலையில், அங்கு வாழ்ந்துவரும் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றிக் கொண்டுவரும் பணி உடனடியாகத் தொடங்கப்படுவதாக அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் டிரிபோலியிலும், அதன் புற நகர்ப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். டிரிபோலியில்தான் அதிக பட்ச இராணுவ அடக்குமறை கட்டவிழ்த்துவிட்ப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள இந்தியர்கள் மீட்க உடனடி நடவடிக்கைத் தொடங்கப்படும் என்று அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ள அயலுறவு அமைச்சகம், ஸ்கோஷியா பிரின்ஸ் எனும் கப்பல் இதற்காக ஈடுபடுத்தப்படும் என்றும், அது பென்காசி துறைமுகம் சென்று 1,200 பேரை ஒரு சேர ஏற்றிக்கொண்டு எகிப்து வந்து சேரும் என்றும், அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்தக் கப்பல் வரும் ஞாயிற்றுக் கிழமை பென்காசி துறைமுகம் செல்லும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவிலுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பேசிய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “லிபியாவிலுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவோம், அதற்காக எந்தக் கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படமாட்டாத ு” ்கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments