Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராடியா – டாடா உரையாடல் ஏப்ரல் 19 முதல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

ராடியா – டாடா உரையாடல் ஏப்ரல் 19 முதல் விசாரணை: உச்ச நீதிமன்றம்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (19:45 IST)
அரசியல் - அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் செல்பேசியில் தான் நடத்திய உரையாடல் ஊடகங்களில் வெளியிடப்பட்டதை எதிர்த்து டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை ஏப்ரல் 19ஆம் தேதிமுதல் தொடர்ச்சியாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது.

நீரா ராடியாவுடன் தான் உட்பட பலரும் நடத்திய உரையாடல்கள், வரி ஏய்ப்பு தொடர்பாகவே பதிவு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை கூறுகிறது. அவ்வாறு இருக்கையில் அந்த பதிவுகள் எவ்வாறு ஊடகங்களில் வெளியானது என்று வினா எழுப்பிய ரத்தன் டாடா, இப்படிப்பட்ட வெளியீடுகள் தனது தனிமையின் மீதான அத்துமீறல் என்றும், அது இந்திய அரசமைப்புப் பிரிவு 21 தனக்கு வழங்கியுள்ள சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி, நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடல் வெளியிடப்பட்டது அரசமைப்புப் பிரிவு 19(1)(ஏ) இன் படி தனது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறியிருந்தார்.

ரத்தன் டாடா எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ஜி.கே.பிள்ளை, மத்திய புலனாய்வுக் கழகம், வருமான வரித் துறை, நிதியமைச்சகம் ஆகியன விளக்கமளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க, அத்துறைகள் தங்களுடைய விளக்கத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துவிட்டன. இந்த நிலையிலேயே இறுதி கட்ட விசாரணை ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil