Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தோருக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை இடைக்கால பிணை

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2010 (14:40 IST)
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 6 மாத சிறை தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பி. ரத்தோர் மீது புதிதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில் அவருக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனது தங்கை ருச்சிகாவை மானபங்கம் செய்தது மட்டுமின்ற ி, காவல் அதிகாரி ரத்தோர் தன்னை சித்ரவதைக்கு உள்ளாக்கியதே அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என்று கூறி ருச்சிகாவின் சகோதரர் அஷூ கிர்ஹோத்ரா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

1990 இல் பள்ளி மாணவியாகவும ், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாகவும் திகழ்ந்த ருச்சிகாவ ை, அப்போது ஹிரியானா மாநில காவல் தலைமை ஆய்வாளராக இருந்த எஸ்.பி.எஸ். ரத்தோர் மானபங்கம் செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு - 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாத சிறைத் தண்டனையும ், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில ், மானபங்கப்படுத்தப்பட்ட ருச்சிகா கடந்த 1993ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தள்ளியத ு, அவளுடைய சகோதரனான தன்னை ரத்தோர் சித்ரவதை செய்ததுதான் என்று அஷு கிர்ஹோத்ரா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவருடைய புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க சண்டிகார் செசன்ஸ் நீதிமன்றத்தில் பிணை கோரி ரத்தோர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் ஜனவரி 7ஆம் தேதி வரை ரத்தோருக்கு இடைக்கால பிணை வழங்கி நீதிபதி எஸ்.பி.சிங் உத்தரவிட்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments