Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியை வெட்டி கொல்வேன் என பேசிய காங்கிரஸ் வேட்பாளர் கைது

மோடியை வெட்டி கொல்வேன் என பேசிய  காங்கிரஸ் வேட்பாளர் கைது
, சனி, 29 மார்ச் 2014 (12:28 IST)
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 40. இவர்  சஹரன்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது, 
Congress candidate is arrested for hate speech against Narendra Modi
நரேந்திர மோடியை குறிப்பிட்டு, ' அவர் இது குஜராத் என நினைக்கிறார்.  நான் மக்களுக்காக எனது உயிரை கொடுக்க தயங்கமாட்டேன். எனக்கு உயிரிழப்பதை பற்றியோ , கொலை செய்வது பற்றியோ பயம்  இல்லை. மோடியை துண்டு, துண்டாக வெட்டி போட்டு விடுவேன். 
 
குஜராத்தில் 4 சதவீத இஸ்லாமியர்கள்  உள்ளனர். ஆனால் உத்தரபிரதேசத்தில் 42 சதவீத இஸ்லாமியர்கள்  உள்ளனர் என்று பேசினார்.
 
இம்ரான் மசூத்தின் இந்த பேச்சு இணையத் தளங்களில் வெளியானது. இதனால் சர்ச்சையில் சிக்கிய இவர் இன்று காலை கைதுச் செய்யப்பட்டார். 
 
இவர் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின்கீழ் இரு தரப்பினரிடையே பகை உணர்வைத் தூண்டுதல், வன்முறை, மத உணர்வை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், மத நம்பிக்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துதல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டு கைது  செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், மசூத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக அங்கு  செல்லவிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil