Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளா தந்திர யோசனை

Webdunia
புதன், 4 ஜனவரி 2012 (16:07 IST)
முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டினால் இரு மாநில கூட்டு குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட தயாராக இருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

இரு மாநிலங்கள் இடையே சிறுவாணி அணை நீர் பங்கீடு ஒப்பந்தம் இருந்து வருகிறது.அது போல் புதிய அணை இரு மாநில கூட்டு குழுவின் கட்டுப்ப ாட ்டில் செயல்பட கேரளா தயாராக உள்ளது.புதிய அணையில் கேரளா நீர் கேட்காது.

அண்டை மாநிலத்துடன் ஒரு இணக்கமான தீர்வு வேண்டும்.அணையின் கீழ் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு கணமும் பாதுகாப்பு முக்கியம். அதே நேரத்தில் அண்டை மாநில மக்களுக்கு தண்ணீர் வேண்டும்.

நாங்கள் தமிழ்நாடு உடன் விவாதிக்க திறந்த மனதுடன் இருக்கிறோம். ஏதாவது பிரச்னை இருந்தால், தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

Show comments