Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீட்புப் பணிகள் தடுமாற்றம்: சிக்கிமில் பதற்றம்

மீட்புப் பணிகள் தடுமாற்றம்: சிக்கிமில் பதற்றம்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (11:35 IST)
பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தின் மங்கன் மற்றும் சிங்டாம் பகுதிகளில் மீடுப் பணியாளர்கள் நுழைய முடியவில்லை. கடும் நிலச்சரிவு காரணமாக மீட்புக் குழுவினர் நுழைய முடியாததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

"நிலநடுக்கத்தின் மையத்தில் சிக்கியுள்ள இப்பகுதிகளில் சேதாரம் மிகவும் மோசமாக ஏற்பட்டுள்ளது. காங்டாக்கிலிருந்து மங்கனுக்கு செல்லும் சாலை கடும் நிலச்சரிவுகளால் முழுதும் மூடப்பட்டுள்ளது" என்று வான்வழி மூலம் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்டாம் வழியாக மங்கனுக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்க என்.டி.ஆர்.எஃப். குழு முயற்சி செய்து வருகிறது.

அங்கு மக்கள் இன்னமும் பதற்றத்திலிருந்து வெளியே வரவில்லை என்றி அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலர் வீடுகளுக்கு வெளியே சாலைகளிலும், பொது இடங்களான கோயில்களிலும் தங்கியுள்ளனர்.

அங்கு சுற்றுலா வந்தவர்களும் காங்டாக்கிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் காங்டாக்கில் மின்சாரம் மற்றும் தொலைபேசி மீண்டும் வேலை செய்யத் துவங்கியுள்ளன.

ஆனால் காங்டாக்கிற்கு வெளியே உள்ள சில பகுதிகள் இன்னமும் இருளிலேயே மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பலத்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். சிக்கிமில் வடக்கு மாவட்டத்தில் பேருந்தில் சென்ற 22 பேர் பேருந்துடன் காணாமல் போயிருப்பது பற்றியும் பதற்றம் நிலவுகிறது.

மாநிலத்தின் செல்ல முடியாத பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil