Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசுப் பணிக்குச் செல்கிறார் ஃபரூக்கி

மத்திய அரசுப் பணிக்குச் செல்கிறார் ஃபரூக்கி
, செவ்வாய், 1 டிசம்பர் 2009 (11:36 IST)
சென்னை: தமி​ழக தொழில்துறை செய​லா​ளராக உள்ள எம்.எஃப். ஃபரூக்கி, மத்​திய அரசுப் பணிக்குச் செல்கிறார். மத்திய சுற்றுச்​சூ​ழல் துறை​ கூடு​தல் செய​லா​ள​ராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுற்றுச்சூழல் துறையின் பங்கு மிக அதிகமாக உள்ள நிலையில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் ஃபரூக்க, அந்தத் துறையின் மூத்த அதிகாரியாக நியமி்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து த​மி​ழக தொழில்துறை​ புதிய செய​லா​ள​ராக,​ வணிக வரி​ மற்​றும் பத்​திர பதி​வுத் துறை​யின் செய​லா​ளர் ராஜீவ் ரஞ்​சன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதனால் முதன்மை செயலாளரும், வணிக வரித்துறை ஆணையருமான டி.ஜேக்கப், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக இருக்கும் முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு அடிப்​ப​டை​யில் ஃபரூக்கி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன் பின்னணியில் திமுக-காங்கிரஸ் அரசியல் உறவும் இருக்கலாம் என்று தெரிகிறது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிலும், நிதித்துறையிலும் பணியாற்றியுள்ள ஃபரூக்கி, சவுதி அரேபியாவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil