Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி - மம்தா அறிவிப்பு

மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி - மம்தா அறிவிப்பு
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:27 IST)
காங்கிரஸுக்கு மாற்று பாஜக அல்ல. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் அல்ல. எங்களின் பரம எதிரியான மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிப்போம். எனவே மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
FILE

மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணிக்காக, மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மூன்றாம் அணி அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை வெல்வோம். மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசு மத்தியில் அமைய முக்கிய பங்காற்றுவோம். திரிணாமுல் காங்கிரஸ் நாட்டிற்கான ஒரு மாற்றாக விளங்கும்.

நாங்கள் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கிறோம். ஊழலுக்கு எதிராகக்கூட நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றிக்காக போராடுவோம். கலகத்தை ஆதரிக்கும் அரசு தேவையில்லை.

வரும் காலங்களில் இந்தியாவிற்கான வழியை திரிணாமுல் காங்கிரஸ் காட்டும். எங்கள் பரம எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைத் தோல்வியுறச் செய்வோம்.

காங்கிரசுக்கு மாற்று பா.ஜனதா அல்ல. பா.ஜனதாவிற்கு மாற்று காங்கிரஸ் அல்ல. குடும்ப ஆட்சியை நாங்கள் விரும்பவில்லை. டெல்லி அரசில் ஒரு மாற்றம் வேண்டும். அதற்காக மத்தியில் ஒரு கூட்டணி உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil