Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் தனியாக சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நடிகை ஹேமமாலினி எச்சரிக்கை!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2013 (20:09 IST)
FILE
பெண்கள் தனியாக சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகை ஹேமமாலினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் கடந்த வாரம் புகைப்பட பெண் பத்திரிகையாளர் ஒருவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பெண்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து பாலிவுட் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஹேமமாலினி கூறியதாவது:-

அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசால் முடியாத இந்த சமயத்தில், பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். இதை மிக சாதாரணமாக நினைக்காதீர்கள். தனியாக சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திரவுபதியின் மானத்தை காக்க கிருஷ்ணர் எப்போதும் வருவார். ஆனால் கடவுள் வந்து நம்மை காப்பாற்ற, நாம் ஆன்மிகத் தன்மை உடையவர்கள் அல்ல என்று அவர் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!