Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு வாபஸ் இல்லை: பிரணாப்

Webdunia
செவ்வாய், 4 மே 2010 (19:43 IST)
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.

மாநிலங்களவையில் நிதி மசோதா மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில் இதனை தெரிவித்த பிரணாப், தற்போதைய நிதி நிலைமையில் விலை குறைப்பு சாத்தியமில்லை என்றார்.

" மன்னியுங்கள்.தற்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளதால், விலை குறைப்பு சாத்தியமில்லை. நல்ல காலத்திற ்காக காத்திருப்போம்" என்று அவர் மேலும் கூறினார்.

2010 - 11 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வாகன எரிபொருள் மீதான சுங்க மற்றும் கலால் வரியை ரூ.26,000 கோடிக்கு உயர்த்தினார் பிரணாப்.

இதனால் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.71 ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.55 ம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments