Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராணாப் முகர்ஜியை வழியனுப்பியபோது மோதல்

பிராணாப் முகர்ஜியை வழியனுப்பியபோது மோதல்
, ஞாயிறு, 1 ஜூலை 2012 (11:59 IST)
ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்ட சென்னை வந்த பிரணாப் முகர்ஜி நேற்று இரவு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய இன்று காலை 9.20 மணிக்கு ஐதராபாத் செல்ல மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு சென்றார்.

அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்பி ஆசாத், மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோர் விமான நிலையத்துக்கு சென்றனர். அப்போது வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களின் கார்களை விமான நிலையத்துக்குள் அனுப்ப மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

இதனால் ஞானதேசிகன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அனுமதி அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதிக்க இயலும். மற்றவர்களை அனுமதிக்க இயலாது என்று போலீசார் கூறினர். ஆனாலும் காங்கிரசார் காரை விட்டு இறங்கி போலீசாரை தள்ளியபடி விமான நிலையத்துக்குள் சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதுகுறித்து ஞானதேசிகனிடம் கேட்டதற்கு போலீசார் மீது எந்த தவறும் இல்லை. பிரணாப் முகர்ஜி எங்களை அழைத்ததால்தான் வழியனுப்ப சென்றோம். அப்போது அங்கு போலீசாருடன் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil