Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கிறார் ராணுவ தளபதி...?

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் என்ன தான் எழுதியிருக்கிறார் ராணுவ தளபதி...?
, புதன், 28 மார்ச் 2012 (18:03 IST)
PTI
இந்திய ராணுவத்தின் பலவீனங்கள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ தளபதி வி.கே.சிங் கடிதம் ஒன்று கடந்த மார்ச் 12 ம் தேதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் நாட்டின் ராணுவ பாதுகாப்பு ஸ்திரத்தன்மையற்று இருப்பதாவும், எதிரிகளை சந்திக்க போதிய ஆயுதங்கள் இல்லாமல் சவால்களை சந்திக்க சிரமப்படுவதாகவும், இரவு நேரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ராணுவ டாங்கிகளில் போதுமான வெடிபொருட்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தளபதி, எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகலாம் என கவலை தெரிவித்துள்ளார்.

வான்வழி பாதுகாப்பு 97 % மோசமாகவும், பலமில்லாமல் இருப்பதாகவும், நமது ராணுவ குறைபாட்டை களைந்திட முயற்சிக்க வேண்டும் என்றும் , இன்னும் நவீனப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் விகே.சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுத்தொடர்பாக ராணுவ அமைச்சகத்திடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை என்பதையும் வி.கே.சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News Summary: The country’s security might be at stake, The army’s tanks have run out of ammunition, the air defence is as good as obsolete and the infantry is short of critical weapons, General VK Singh wrote to the prime minister

Share this Story:

Follow Webdunia tamil