Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சார மேடையில் ராமர் படம்: மீண்டும் சிக்கலில் மோடி!

Ilavarasan
திங்கள், 5 மே 2014 (17:29 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.
 
ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்து நேரடியாக ஏதும் பேசாவில்லை. தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியதோடு ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும் வார்த்தை தவற மாட்டார்கள் என மறைமுகமாக ராமரை மேற்கோள்காட்டி பேசினார்.
 
இந்நிலையில், மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. இத்தகவலை உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா உறுதிபடுத்தியுள்ளார்.
 
அண்மையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி பாஜக தாமரை சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு பேசியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments