Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக் - இந்திய எல்லை வேலியை தாண்டி வீசப்பட்ட 5 லட்சம் ரூபாய்

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2013 (11:30 IST)
FILE
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வேலியை தாண்டி வீசப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ஜம்மு மாவட்டத்தின் சவானி எல்லை சோதனைச் சாவடியை அடுத்த ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 2 பேர் ஏதோ பொருட்களை வேலி வழியாக இந்திய எல்லைக்குள் வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இடத்திலிருந்து சுமார் 4,96,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கைபற்றியுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்த இந்த கள்ளநோட்டு கட்டுகளை எல்லைக்கு இந்தப்பக்கம் வீசியது யார், என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments