Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு: இந்தியா, சீனா, ரஷ்யா ஒப்புதல்

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு: இந்தியா, சீனா, ரஷ்யா ஒப்புதல்
பெங்களூரு , செவ்வாய், 27 அக்டோபர் 2009 (13:57 IST)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் தோற்றுவிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நெருக்கமான முறையில் ஒத்துழைக்க இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா-ரஷ்யா-சீனா ஆகிய நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சீனா தரப்பில் யாங் ஜெய் சி, ரஷ்யா தரப்பில் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்.

கடந்த காலத்தில் 3 நாடுகளுக்கிடையே நடந்த எட்டு சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் வளர்ச்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்தனர். பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து தோற்றுவிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒன்றாக எதிர்கொள்வது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்த 3 நாட்டு அயலுறவு அமைச்சர்கள், தங்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், ஒத்துழைப்பு மேற்கொள்ள புதிய துறைகளைக் கண்டறிந்துள்ளதாகவும் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil