Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பப்பு யாதவுக்கு பிணை: பாட்னா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பப்பு யாதவுக்கு பிணை: பாட்னா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி , திங்கள், 3 மே 2010 (19:25 IST)
ராஷ்டிரீய ஜனதா தள முன்னாள் எம்.பி. பப்புயாதவுக்கு வழங்கிய பிணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்,பிணை வழங்கியதற்காக பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரீய ஜனதா தள முன்னாள் எம்.பி.பப்புயாதவ் என்கிற ராஜேஷ் ரஞ்சன்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவருக்கு எந்த நீதிமன்றதிலும் பிணை வழங்கக்கூடாது என்று, கடந்த 2007 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாட்னா உயர் நீதிமன்றம் பப்பு யாதவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பப்புயாதவுக்கு வழங்கிய பிணையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிபிணை வழங்கியதற்காக பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil