Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று கூறியதில் தவறில்லை - சல்மான் குர்ஷித்

நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று கூறியதில் தவறில்லை - சல்மான் குர்ஷித்
, வியாழன், 27 பிப்ரவரி 2014 (09:18 IST)
குஜராத் கலவரத்தை தடுக்க முடியாத நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று கூறியதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
FILE

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, "2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திர மோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மையற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்" என்று தெரிவித்திருந்தார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான் குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினர்.

ஆனால், தனது விமர்சனத்தில் மாற்றம் இல்லை என்று சல்மான் குர்ஷித் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-௦

நரேந்திர மோடியை 'ஆண்மையற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை விமர்சிக்க எனக்கு வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை. நான் அவரது டாக்டர் இல்லை. அதனால், அவரை உடல்ரீதியாக பரிசோதிக்க முடியாது. எனவே, அவர் உடல்ரீதியாக எப்படி இருக்கிறார் என்று கூறுவது என் வேலை அல்ல. ஆனால், எதுவும் செய்யத் திறமையற்றவர்களை குறிப்பிட அரசியல் அகராதியில் 'ஆண்மையற்றவர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

குஜராத் கலவர விவகாரத்தில், நரேந்திர மோடி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒன்று, கலவரத்தின் பின்னணியில் இருந்ததாகவோ அல்லது கலவரத்தை தடுக்க முடியாத நிலையில் இருந்ததாகவோ அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்று, 'நான் முற்றிலும் திறமையானவன், வலிமையானவன், திட்டமிட்டே கலவரம் நடத்தப்பட்டது' என்று கூறுங்கள். அல்லது 'நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், கலவரத்தை ஒடுக்கும் வலிமை எனக்கு இருக்கவில்லை' என்று கூறுங்கள்.

கலவரத்தை ஒடுக்க இயலாதபட்சத்தில், அதை என்னவென்று கூறுவது? ஆண்மையின்மை என்று கூறக்கூடாதா? அதைத்தான் நான் கூறினேன். இதில் என்ன பிரச்சனை? இதற்குப்போய் பாரதீய ஜனதா தலைவர்கள் குற்றம்௦சாற்றுகிறார்கள். அவர்களுக்கு அந்த வார்த்தை புரியவில்லை என்றால், நான் அவர்களுக்கு அகராதியை அனுப்பி வைக்கிறேன் அல்லது வேறு பொருத்தமான வார்த்தை இருந்தால் சொல்லுங்கள், அதை பயன்படுத்துகிறேன்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil