Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு தேசம் கட்சியி‌ல் இருந்து ‌வி‌ல‌கினா‌ர் நடிகை ரோஜா

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (08:55 IST)
சந்திரபாபு நாயுடு யாரையும் நம்ப மாட்டார், எதுவும் செய்ய மாட்டார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து அவ‌ர் ‌வில‌கியு‌ள்ளா‌ர்.

WD
தெலுங்கு தேசம் கட்சியில் மாநில மகளிர் அணி தலைவியாக இரு‌ந்து வ‌ந்த நடிகை ரோஜ ா, கடந்த 2004ஆம் ஆண்டு நகரி சட்டமன்ற தொகுதியிலும், 2009-ம் ஆண்டு சந்திரகிரி சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை‌த் தொட‌ர்‌ந்து சில காலமாக அவர் தெலுங்கு தேசம் கட ்‌சி ‌மீது அதிருப்தியில் இருந் ததாகவு‌ம், கட்சியை விட்டு விலகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த 30 ஆ‌‌ம் தேதி ஹ ைதராபாத்தில் மறைந்த முத லமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். ஆகவே அவர் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகுவது உறுதி என்றும், காங்கிரசில் சேருவதற்காக அவர் ர ாஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்போது இந்த சந்திப்பு பற்றி ரோஜா எந்த தகவலையும் வெளியிட வில்லை. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலக வில்லை.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முறைப்படி நே‌ற்று விலகினார். கட்சியின் மாநில மகளிர் அணி தலைவ ி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி, அதற்கான கடிதங்களை கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 'பேக்ஸ்' மூலம் அனுப்பி வைத்திருப்பதாக செ‌ய்த‌ியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது பற்றி, அவர் ஹை தராபாத்தில் உள்ள தனது வீட்டில் பேட்டி அளித்தார். அ‌ப்போது அவ‌ர் கூ‌றியதாவத ு:

நான் 2 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என் கட்சியினரே என்னை 2 முறையும் வெற்றி பெறவிடாமல் தோற்கடித்தனர். அப்போதுதான், என்னை தெலுங்கு தேசம் கட்சியினர், அரசியலில், கட்சியில் வளரவிட மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டம் சித்தூர். மிகவும் பின் தங்கிய மாவட்டமும் கூட. ஆனால் அவர் முத லமை‌ச்சராக இருந்த பொது இந்த மாவட்டத்துக்காக எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை.

ஆனால் மறைந்த முத லமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டி இந்த மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த தயாராக இருந்தார். இந்த மாவட்டத்தில் காளஹஸ்தி அருகில், மண்ணவரம் என்ற இடத்தில் `பெல்' நிறுவனத்தின் மின்சாதன கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 370 ஏக்கரில் அமைக்க அடிக்கல் நாட்ட திட்டமிட்டு இருந்தார். இந்த தொழிற்சாலைக்கு கடந்த 6 ஆ‌ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. அவரது வருகை 15 ஆ‌ம் தேதிக்கு தள்ளிப்போனதால் அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மு தலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டியும் துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்து விட்டார்.

நானும் அந்த விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொள்ள இருந்தேன். அதற்காகத்தான் ராஜசேகர ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது என்னை, ''வாங்க சந்திரகிரி செல்லம்மாள் (சந்திரகிரி தங்கை) மேடம் என்று அன்போடு, மரியாதையோடு அழைத்தார்.

அவரை நான் பலமுறை தரம் தாழ்ந்து கூட விமர்சனம் செய்து இருக்கிறேன். அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் என்னிடம் மிகவும் மரியாதையோடு, கண்ணியத்தோடு நடத்தினார். அவரோடு பேசியது எல்லாம் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட நல்ல மனிதருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது என் துரதிருஷ்டம்தான். அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.

ராஜசேகர ரெட்டி தன்னை நம்பி வருகிறவர்களை கைவிட மாட்டார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் சந்திரபாபு நாயுடு யாரையும் நம்ப மாட்டார், எதுவும் செய்ய மாட்டார் என்று நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேரும்போதே பலர் சொன்னார்கள். அதையெல்லாம் நம்பாமல் நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து, எந்த பதவிக்கும் ஆசைப்படாமல், எந்த பலனும் எதிர்பார்க்காமல் 10 வருடம் உழைத்தேன்.

நான் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகப் போவதை அறிந்து பலர் வாழ்த்து தெரிவித்தனர ், சந்தோஷப்பட்டார்கள். நான் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தால் மக்களுக்கு, என்னை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அங்கு சும்மா, பொம்மையாக இருப்பதை விட, என்னை நானே ஏமாற்றிக் கொண்டு, என்னை நம்பி இருப்பவர்களையும் ஏமாற்ற விரும்ப வில்லை. ஆகவே மகளிர் அணி தலைவி மற்றும் சாதாரண தொண்டர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டேன ்.

இ‌வ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments