Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்

திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்
, வியாழன், 12 ஏப்ரல் 2012 (18:04 IST)
திருமணங்கள் பதிவு செய்வதை இனி கட்டாயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய சட்ட அமைச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்கவேண்டியதில்லை என்றும் சட்ட அமைச்சகம் பரிந்துரைத்தது

இதற்கு இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், திருமணங்கள் பதிவு செய்வது கட்டாயமாவதோடு, மதம் மாறி திருமணம் செய்பவர்களும், சீக்கிய, புத்த மதத்தை சேர்ந்தவர்களும் தங்களின் மதம் குறித்த தகவலை குறிப்பிடாமலே பதிவு செய்யலாம். ஏனென்றால், சீக்கிய , புத்த மதத்தவர்கள் தங்கள் திருமண பதிவு இந்து முறைப்படி என்று பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே மத்திஅமைச்சரகபிலசிபலசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீக்கிதிருமணங்களஆனந்ததிருமசட்டம், 1909 என்சட்டத்தினகீழபதிவசெய்யுமவகையில், மசோதஒன்றநிதிநிலை கூட்டததொடரிலகொண்டுவமத்திஅரசமுடிவசெய்துள்ளதாதெரிவித்தார்.

News Summary:
The Union Cabinet approved a proposal, which makes the registration of marriages mandatory in the country.
The Cabinet also cleared the proposal put forward by the Union Law Ministry, which says the registration of marriages in India can be carried on without divulging the religion of the parties concerned.

Share this Story:

Follow Webdunia tamil