Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகார் சிறைச்சாலை ஈட்டிய ரூ.15.25 கோடி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (11:22 IST)
திகார் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இனிப்புகள், மரச்சாமான்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதன்படி, 2011-ஆம் ஆண்டு தயாரித்த பொருட்களை விற்பனை செய்து, டெல்லி திகார் சிறை ரூ.15.25 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஈட்டிய வருவாய் ரூ.13 கோடியாகும். டி.ஜே. (திகார் ஜெயில்) என்ற பெயரைக் கொண்டு விற்கப்படும் இப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். திகார் சிறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு பொருட்காட்சிகளிலும், வர்த்தக கண்காட்சிகளிலும் இடம்பெறுகின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் திகார் தயாரிப்புகள் ரூ.4.45 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளன. வரும் நிதியாண்டில் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மூலம் ரூ.29 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திகார் ஜெயிலில் சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். இடவசதியுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments