Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக சட்டசபை தீர்மானம்: மீண்டும் மீண்டும் சீண்டுகிறார் ஒமர் அப்துல்லா

தமிழக சட்டசபை தீர்மானம்: மீண்டும் மீண்டும் சீண்டுகிறார் ஒமர் அப்துல்லா
புதுடெல்லி , வியாழன், 1 செப்டம்பர் 2011 (11:11 IST)
3 பேர் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானம் குறித்து மீண்டும் விமர்சித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி எங்கள் சட்டசபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினர் மவுனமாக இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தீர்மானம் குறித்து விமர்சித்து தமது ட்விட்டர் தளத்தில் நேற்று கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரான ஒமர் அப்துல்லா, "ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது போல் காஷ்மீர் சட்டசபையில் நாங்களும் அப்சல் குருவை (நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி)ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றலாமா? இதை கட்சிகள் ஆதரிக்குமா?" என்று கேள்வி விடுத்திருந்தார்.

இதற்கு பா.ஜனதா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில்,மீண்டும் தமிழக சட்டசபை தீர்மானம் குறித்து விமர்சித்துள்ளார் ஒமர் அப்துல்லா.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் இணைய தளத்தில் எழுதியுள்ளதாவது:

"ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அதேபோல், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினரும் மற்றவர்களும் மவுனமாக இருப்பார்களா? இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்".

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil