Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரைக் கட்டாயம்: சி.ஏ.ஜி. அறிக்கை!

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரைக் கட்டாயம்: சி.ஏ.ஜி. அறிக்கை!
, வியாழன், 30 ஆகஸ்ட் 2012 (18:30 IST)
தரமற்ற தங்கத்தை நுகர்வோர் வாங்கி ஏமாறாமல் இருக்க நகைகளுக்கு கட்டாயமாக தரக்குறியீடு பொறிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு மத்திய கணக்குத் தணிக்கைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த தங்கம் சுத்த தங்கம்தான் என்பதற்கு வழங்கப்படும் சான்றுதான் ஹால்மார்க் எனப்படும் தரக்குறியீடு.

இந்த ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட தரமான நகைகளை, தற்போது ஒரு சில உற்பத்தியாளர்கள் மட்டுமே தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைப்பு(பி.ஐ.எஸ்), ஹால்மார்க் தரச்சான்று வழங்கி வருகிறது. இந்நிலையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரக்குறியீட்டை கட்டாயமாக்க நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் தரநிர்ணய அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய கணக்கு தணிக்கை குழு இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

அதில், பி.ஐ.எஸ். அமைப்பின் தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்யப்படாததால், ஹால்மார்க் சான்றை கட்டாயமாக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தங்கம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு ஹால்மார்க் தரச்சான்றை கட்டாயமாக்கும் பி.ஐ.எஸ். சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil