Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவுக்கு சவால் அளிக்கும் ஆகாஷ் ஏவுகணைத் தயார்

சீனாவுக்கு சவால் அளிக்கும் ஆகாஷ் ஏவுகணைத் தயார்
, வெள்ளி, 2 மார்ச் 2012 (05:47 IST)
வானிலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று துல்லியமாக தாக்கும் ‘ஆகாஷ்’ ஏவுகணை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.

இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (ஐ.ஜி. எம்.டி.பி.) ‘ ஆகாஷ்’ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகண‌ை இந்தியாவின் ‘பேட்ரியாட் ’ என அழைக்கப்படுகிறது. இலகு ரக ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தேசிய அறிவியல், மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களை தாக்கவல்லது. கப்பல்தளம், ஹெலிகாப்டர், நீர்முழ்கி கப்பல்கள் ஆகியவற்றிலிருந்தும் ஆகாஷ் ஏவுகணையினை செலுத்தலாம்.

இந்த ஏவு‌கணை இந்திய விமானப்படையிடம் முறைப்படி நாளை (சனிக்கிழமை ) ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கான விழாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கலந்து கொள்கிறார்.

பேட்ரியாட் என்பது அமெரிக்கா தயாரித்துள்ள ஏவுகணை ஆகும். பேட்ரியாட், கடந்த 1990-ம் ஆண்டு ஈராக்கில் நடந்த வளைகுடா போரில் பெருமளவு பேட்ரியாட் பயன்படுத்தப்பட்டது.

சீனாவினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ராணுவ ஆயுதம் தயாரிப்பில் இந்த ஏவுகணை ‌ஒரு மைல்கல்லாகும் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil