கோலியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (10:21 IST)
விராட் கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்று, பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டிவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதே போல் ஃபிட்னஸ் சேலஞ்சை செய்து வீடியோ வெளியிடும்படி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன்  என கூறியிருந்தார்.
 
இதனை ஏற்றுக்கொண்ட கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு தனது டாஸ்கை முடித்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, கேப்டன் டோனி ஆகியோரை இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை செய்யும்படி கூறியிருந்தார்.
கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என  கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  உடற்பயிற்சி மற்றும் யோகா புத்துணர்ச்சியூட்டுவதாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
 
மேலும் பிரதமர் மோடி இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு விடுத்துள்ளார். மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை விடுத்துள்ளார். பிரதமரின் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments