Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குப்பைக் கிடங்காக மாறிய ராம்லீலா மைதானம்

குப்பைக் கிடங்காக மாறிய ராம்லீலா மைதானம்
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (17:23 IST)
சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே உண்ணாவிரத வெற்றி மகிழ்ச்சியில் ராம்லீலா மைதானம் குப்பைக் கிடங்காக மாறியுள்ளதை ஒருவரும் கவனிக்கவில்லை.

காலி அல்லது பாதி தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், உணவுப்பொருட்கள், அட்டைப்பெட்டிகள், சாதம், கறி, எண்ணற்ற வாழைப்பழ தோலிகள், கிழிந்த பாய்கள் உள்ளிட்ட பல குப்பைகளின் கிடங்காக ராம்லீலா மைதானம் நாறிவிட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

உண்ணாவிரத நாட்களில் அண்ணா ஹசாரே ஆதரவு ஊழியர்களும், எம்.சி.டி. ஊழியர்களும் மைதானத்தை சுத்தம் செய்து வந்தனர். ஆனால் இன்று உண்ணா விரதம் முடிந்து அண்ணா ஹசாரே மருத்துவமனை புறப்பட்டவுடன் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நின்று போனது.

மைதானத்தில் இத்தனைக்கும் மிகப்பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குப்பைகளை இந்த தொட்டிகளில் அள்ளி, பிறகு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போடவேண்டியதுதான் ஆனால் இதனைச் செய்ய அங்கு ஆளில்லை.

இது பற்றி அண்ணா ஹசாரே ஆதரவுத் தொண்டர் ஒருவரிடம் கேட்டதற்கு இந்தியா கேட் அருகே கொண்டாட்ட நிகழ்ச்சிகளை கவனிக்கவேண்டியுள்ளது, குப்பை அள்ளுவது என் வேலை அல்ல என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால் இவர் மைதானத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நியமிக்கப்பட்ட குழுவில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் அமைக்கப்பட்ட 'அண்ணா கி ரசோய்' என்ற சமையல் கூடம், இதிலிருந்துதான் இலவச உணவு பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சமையற்கூடமும் குப்பைக் கிடங்கிற்கு பங்களிப்பு செய்துள்ளது.

வெடித்த சாதம், சமைத்த காய்கறீ, வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற சமையல் பொருட்களும் குப்பைக் குப்பையாக அங்கு கிடந்தன.

ஊழல் ஒழிப்பு மசோதா லோக்பால் நிறைவேற இன்னமும் காலம் ஆகும் என்றும், அதிசயங்களை மக்கள் எதிர்பார்க்கவேண்டாம் என்றும் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்திருக்கும் வேளையில், இப்போதைக்கு ராம்லீலா மைதானத்தில் குப்பைகள் சேர்ந்ததே மிச்சம்.

இப்போது இந்த வெற்றிக்களிப்புக் கூட்டம் இந்தியா கேட் பகுதியையும் குப்பைக்கூளமாக்கத் திரண்டுள்ளது!

Share this Story:

Follow Webdunia tamil