Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தலில் பணபேரம்-மமதா குற்றசாட்டு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2012 (11:43 IST)
FILE
மம்தா பானர்ஜி எழுதியுள்ள கட்டுரையில், கடந்த 2 நாட்களாக டெல்லியில் பல்வேறு ரகசிய பேரங்கள் நடந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பண பேரமும் நடந்து வருகிறது. ஜனநாயக அரசிலுக்கு இது உகந்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் கலாமுக்கு பேஸ்புக் இணையதளம் மூலம் ஆதரவு திரட்டி வரும் மம்தா பானர்ஜி, நேற்று பேஸ்புக் பக்கத்தில் புதிய பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் இணைய தளத்தில் எழுதி இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த ஒருமித்த குரலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஜனாதிபதி தேர்தலில் நடக்கும் லஞ்ச பண பேரம், ரகசிய பேரங்களை எதிர்த்து போராட மக்கள் முன் வரவேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டம். பொது மக்களின் விருப்பம், லஞ்சம், பண பேரம் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று அரசியலில் இறை யாண்மை, கொள்கைகள் இல்லாமல் போய்விட்டது. இது நமது நாட்டின் நீண்ட பாரம்பரியத்தை அழிப்பதாக உள்ளது. இந்தியாவின் மரபு, ஒற்றுமை, ஜனநாயகத்தை காக்க வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலில் நடக்கும் ஊழல் மற்றும் ரகசிய பேரங்களுக்கு எதிராக போராட மக்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு பேஸ் புக் இணைய தளத்தில் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments