Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் வெடிமரு‌ந்துட‌ன் கைது!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:20 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் நட‌க் க உ‌ள் ள குடியரச ு ‌ தி ன ‌ விழா அன்ற ு ச‌‌தி‌‌ச ் செய‌ல்களு‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந் த ‌ தீ‌விரவா‌திக‌ள ் இருவர ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீர் மாநிலத்தில் நாளை நடக்க உள்ள குடியரசு தின விழாவை சீர்குலைக்கு‌ம் நோக்கத்துடன் அவர்கள் ஊடுருவி இருப்பது தெரிந்ததாக‌க் காவ‌ல் துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர். ‌பிடி‌ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌விவர‌ங்களை‌ காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் வெ‌ளி‌யிட‌வி‌ல்லை.

கிஸ்த்வார் மாவட்டத்தில் பட்டிமோகல்லா என்ற இடத்தில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக‌க் காவல‌ர்களு‌க்கு‌ ரகசிய‌த் தகவல் கிடைத்தது.

அங்கு 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர ஏ.கே.47 துப்பாக்கிகள், 40 குண்டுகள், 2 கையெறி குண்டுகள், 13 டெட்டனேட்டர்கள், 8 பாட்டில் பிளாஸ்டிக் வெடிபொருட்கள், 18 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.

சில தீவிரவாதிகள் நேற்றிரவு இந்த ஆயுதங்களை கொண்டு வந்து பதுக்கியது தெரியவந்தது. அவ‌ர்களை‌‌ப் பாதுகாப்பு படையினர் தேடி வருகி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

Show comments