Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால அவகாசமா? உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?-கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நீதிபதி கேள்வி!

கால அவகாசமா? உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?-கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நீதிபதி கேள்வி!
, செவ்வாய், 7 பிப்ரவரி 2012 (00:30 IST)
ஆட்சேபணைக்குரிய வீடியோ மற்றும் செய்திகள், படங்கள் ஆகியவற்றை நீக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கூற பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 22 இணையதள நிறுவனங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளார் நீதிபதி.

இந்த நிறுவனங்களை நோக்கி அவர், "அதிக கால அவகாசத்திற்கு நீங்கள் தகுதியுடைவர்கள்தானா? " என்றும் கேட்டார் நீதிபதி.

மார்ச் 1ஆம் தேதி பதில் கூறவேண்டும் என்று நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது. இந்த 22 நிறுவனங்கள் மீதும் ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக கிரிமினல் வழக்கு போடப்பட்டது.

மார்ச் 13ஆம் தேதி இந்த வழக்கில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

யாகூ, ஆர்குட் மற்றும் பல இணையதளங்கள் மத உணர்வுகளுக்கு எதிராகவும் சமூக விரோத கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம்சாற்றப்பட்டது.

பேஸ்புக், மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளை நீதிபதி பிரவீண் சிங் முன்பு சமர்ப்பித்தனர்.

பேஸ்புக் இணையதளம் தங்களது விளக்கத்தில், அதில் வந்துள்ள சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் வீடியோக்களின் யு.ஆர்.எல். (இணையதள முகவரி) பேஸ்புக்.காம் என்பதாக இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் அது பயனாளர் தொடர்புடையது, அமெரிக்காவில் உள்ள பேஸ்புக்.காம் அதில் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தவியலாது என்று கூறியுள்ளனர்.

கூகுள் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோதே சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தவர் முப்தி ஐஜாஜ் அர்ஷத் காஸ்மி என்பவராவார். அவர் கோர்ட்டில் இந்த இணைய நிறுவனங்கள் தங்களது தளங்களில் சர்ச்சைக்குரிய மத ரீதியான கார்ட்டூன்கள், வெட்டி ஒட்டப்பட்ட போட்டோக்கள், மற்றும் கடவுளர்களின் பிம்பங்கள் கேலிக்குரிய முறையில் இருந்ததாகக் காண்பித்தார்.

தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப இணை அமைச்சர் சச்சின் பைலட் இது குறித்துக் கூறுகையில், சென்சார் செய்வது குறித்து அரசுக்கு எந்த வித விருப்பமும் இல்லை, ஆனால் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில், இந்த விவகாரத்தில் இந்தியா சீனாவை பின்பற்றி இந்திய சட்டங்களை மதிக்காத வலைத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தாங்கள் என்றாலும், தங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் விஷய்ங்களை கண்காணிக்கவியலாது என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil